இந்தியா

கரோனா: குணமடைந்தோர் விகிதம் 97 சதவீதமாக உயர்வு

16th Jan 2021 10:17 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 97 சதவீதம் போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,42,841-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்றில் இருந்து மேலும் 16,977  போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,79715 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 97 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 175 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,52,093-ஆக அதிகரித்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.

நாடு முழுவதும் 2,11,033  போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.00 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 15-ஆம் தேதி வரை 18.57 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,03,090 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Tags : coronavirus India
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT