இந்தியா

கோவின் செயலில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி: மத்திய அரசு திட்டவட்டம்

DIN


புதுதில்லி: கோவின் செயலில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது. 

தொடக்க நாளான சனிக்கிழமை ஒவ்வொரு மையத்திலும் தொடக்க நாளில் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்னுரிமை பிரிவினராக தெரிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.  கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி நடைமுறை கோ-வின் மென்பொருள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 1075 - கட்டணமில்லா தொலைபேசி மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக 30 கோடிக்கும் அதிகமான சுகாதார மற்றும் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, கோவின் என்ற டிஜிட்டல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. 

இந்த செயலி மூலம் தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். இந்த செயலியை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். 

விரைவில் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு வழங்கப்படும். அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் சாதாரண மக்களும் கூகுள் பிளேஸ்டோரில் சென்று தங்களது விவரத்தை பதிவு செய்யலாம்.

கரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளௌட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது கோவின் செயலி.

இந்த செயலின் மூலம் கரோனா தடுப்பூசி பயன்படுத்தியவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். தடுப்பூசி வேண்டி விண்ணப்பிப்பவர்கள்,  தடுப்பூசி போட்டுக்கொள்ளவதற்கான நேரம் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். 

பயனாளிகள் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றம் செய்தவுடன் அவரது செல்லிப்பேசிக்கு குறுங்செய்தி தகவல் வழங்கப்படும். மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்த கியூஆர் கோடு சான்றிதழ் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT