இந்தியா

சரியான நேரத்தில் கரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது: பிரதமர்

DIN

சரியான நேரத்தில் நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். பின்னர் அவர் மக்களுக்கு உரையாற்றினார்.

விஞ்ஞானிகளுக்கு பாராட்டு:

அப்போது அவர் பேசியதாவது, கரோனா தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா தடுப்பூசிக்கு பின்பு ஓய்வே இல்லாமல் உழைத்த பலர் உள்ளனர்.

விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் குறுகிய காலத்தில் நாட்டில் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

குறுகிய காலத்தில் தடுப்பூசி உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலக நாடுகளுக்கு பறைசாற்றியுள்ளது.

தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்கும்:

ஒரு நபர் இரண்டு டோஸ் கரோனா தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவை மத்திய அரசே ஏற்கும். 2-ஆம் கட்டமாக நாட்டில் 30 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. 
ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கப்படும்.

கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கரோனாவிற்கு எதிரான நமது போராட்டம் தொடர்ந்துகொண்டுள்ளது.

2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை:

மனித குலம் ஒன்றை நினைத்து செயல்பட்டால் அதனை நிச்சயம் அடையலாம்.

மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை. மற்ற தடுப்பூசிகளைக் காட்டிலும் இந்திய தடுப்பூசிகள் விலை குறைவானவை.

உலக அளவில் இந்தியாவில் அதிகம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்திய கால நிலைக்கு ஏற்றவகையில் நாம் கரோனா தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளோம்.

தடுப்பூசி வந்தாலும், கரோனா தடுப்பு பணி கட்டாயம்:

கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கரோனாவிற்கு எதிரான நமது போராட்டம் தொடர்ந்துகொண்டுள்ளது.

பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிவதை தொடர வேண்டும்.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ராஜெனகா இணைந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை கண்டறிந்துள்ளன.

இந்த கோவிஷீல்டு மருந்தை தயாரித்து விநியோகிக்கும் உரிமையை புணேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.
 
பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் தடுப்பூசியை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT