இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி: தொடக்கி வைத்தார் பிரதமர்

DIN

கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 

உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது. 

தொடக்க நாளான சனிக்கிழமை ஒவ்வொரு மையத்திலும் தொடக்க நாளில் 100 பயனாளிகள் வீதம் 3 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்னுரிமை பிரிவினராக தெரிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.  கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி நடைமுறை கோ-வின் மென்பொருள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 1 0 7 5 - கட்டணமில்லா தொலைபேசி மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  மதுரையில் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் முதல் கரோனா தடுப்பூசியானது மருத்துவர் சங்க மாநிலத் தலைவரும், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவரான செந்திலுக்கு செலுத்தப்பட்டது.

கர்ப்பிணிகள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும், மற்ற தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் 14 நாள்கள் கால இடைவெளி அவசியம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT