இந்தியா

கரோனா தடுப்பூசியை ஆரத்தி எடுத்து வரவேற்ற மருத்துவமனை ஊழியர்கள்

PTI


மும்பை: மும்பை கூப்பர் மருத்துவமனைக்கு இன்று காலை வந்த கரோனா தடுப்பூசி மருந்துகளை, மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆரத்தி எடுத்து, இனிப்பு மற்றும் பூக்கள் அடங்கிய தட்டுகளுடன், கூப்பர் மருத்துவமனை வாயிலில் மருத்துவமனை ஊழியர்கள் காத்திருந்தனர்.

கரோனா தடுப்பு மருந்து அடங்கிய பெட்டிகள் மருத்துவமனை வாயிலில் வந்திறங்கியதும், அதற்கு ஆரத்தி எடுத்தும் கைதட்டியும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை தொடக்கி வைத்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியாக தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

முதல் நாளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,934 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, முதல் நாளில் மொத்தம் 3,006 மையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT