இந்தியா

நாடு முழுவதும் 1.65 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி: மத்திய அரசு

16th Jan 2021 07:34 PM

ADVERTISEMENT


நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) 1,65,714 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது இதுபற்றி தெரிவிக்கப்பட்டது:

ADVERTISEMENT

"சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்ட் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் 12 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இரண்டு தடுப்பூசிகளைக் கொண்டு நாடு முழுவதும் 3,351 அமர்வுகள் நடத்தப்பட்டன. முதல் நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெற்றிகரமாக இருந்தது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இதுவரை எவ்விதத் தகவலும் வெளிவரவில்லை.

நாடு முழுவதும் 1,65,714 பயனாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது முதல் நாள் என்பதால் பயனாளர்களின் பட்டியலை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது மற்றும் இன்றைய தினத்துக்கு திட்டமிடப்படாத சுகாதாரப் பணியாளர்கள் சிலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட்டன. இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது." 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT