இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதியின் வெளிப்படைத் தன்மை குறித்து 100 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கேள்வி

16th Jan 2021 09:41 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பேரிடர் பணிகளை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியின் வெளிப்படைத் தன்மை குறித்து 100 முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரோனா தொற்று பேரிடரை சமாளிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் பி.எம்.கேர்ஸ் எனப்படும் நிதி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள இந்த நிதிஅமைப்புக்கு நன்கொடை வழங்குமாறு மத்திய அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பி.எம்.கேர்ஸ் மூலம் வசூல் செய்யப்பட்ட தொகையின் பயன்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். பி.எம்.கேர்ஸ் நிதி வெளிப்படைத் தன்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 100 பேர் அடங்கிய குழு பி.எம்.கேர்ஸ் குறித்து பிரதமர் மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. 

ADVERTISEMENT

அதில் நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட நிதி விவரங்கள், அதன் செலவினங்கள், ரசீதுகள் ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது மற்றும் நிர்வகிக்கப்பட்ட விதம் ஆகியவைகள் குறித்த பல கேள்விகளுக்கு மத்திய அரசு முறையாக பதிலளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா அக்னிஹோத்ரி, எஸ்.பி. அம்ப்ரோஸ், ஷரத் பெஹார், சஜ்ஜாத் ஹாசன், ஹர்ஷ் மந்தர், பி ஜாய் ஓமன், அருணா ராய், மது பதுரி, கே.பி. பி.ஜி.ஜே நம்பூதிரி மற்றும் ஜூலியோ ரிபேரோ உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Tags : PM CARES Fund
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT