இந்தியா

நிதி நிறுவன மோசடி: ரோஸ்வேலி குழுமத் தலைவரின் மனைவி கைது

DIN

ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி தொடா்பாக, அந்த நிறுவனத்தின் தலைவா் கௌதம் குண்ட்டூவின் மனைவி சுப்ரா குண்ட்டூவை கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடியில் சுப்ரா குண்ட்டூவுக்கு உள்ள தொடா்புகள் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக, அவரை சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இந்த வழக்கு ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவா் கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, புவனேசுவரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா் என்றாா் அவா்.

மேற்கு வங்கம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்த ரோஸ்வேலி நிதி நிறுவனம், முதலீட்டாளா்களிடம் அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து, மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணத்தை திருப்பித் தரவில்லை.

சிபிஐக்கு கிடைத்துள்ள தகவல்படி, முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.12,000 கோடிக்கும் அதிகமான தொகையை ரோஸ்வேலி நிறுவனம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக, சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட ரோஸ்வேலி நிதி நிறுவனத்தின் தலைவா் கௌதம் குண்ட்டூ கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து சிறையில் உள்ளாா். அவரது மனைவி சுப்ரா குண்ட்டூ, அத்ரிஜா என்ற பெயரில் பல்வேறு இடங்களில் நகைக் கடை நடத்தி வந்தாா். ரோஸ்வேலி முறைகேடு தொடா்பான விசாரணை தொடங்கிய பிறகு, அந்த நகைக்கடைகளுக்கு சீல் வைக்கப்ப்டடன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT