இந்தியா

அமைச்சர் ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

15th Jan 2021 04:51 PM

ADVERTISEMENT

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

இந்தியா மற்றும் நேபாள கூட்டு ஆணையத்தின் 6ஆவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதில் இந்திய மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, நீர்வளம், அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள், எல்லை மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT