இந்தியா

நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.13 இலட்சமாகக் குறைவு

15th Jan 2021 02:22 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை  தற்போது 2.13 இலட்சமாக (2,13,027) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.03 சதவீதமாகும்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து 20,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,590 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,975 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,01,62,738 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தைக் கடந்துள்ளது (99,49,711). குணமடைந்தவர்களின் வீதம் 96.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக குணமடைந்தவர்களில் 81.15 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளத்தில் 4,337 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

77.56 சதவீத புதிய தொற்றுக்கள் 7 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. கேரளத்தில் 5,490 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT