இந்தியா

நாளை காலை 10.30 மணி முதல் கரோனா தடுப்பு மருந்து: மோடி

15th Jan 2021 09:39 PM

ADVERTISEMENT

நாளை காலை 10.30 மணி முதல் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். 

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,006 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெறவுள்ளது. 

ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 

ADVERTISEMENT

முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதன் பின்னர் மற்றவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT