மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,145 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,145 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,84,768 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,500 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 45 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 18,81,088 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50,336 பேர் பலியாகியுள்ளனர்.
ADVERTISEMENT
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 52,152 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.