இந்தியா

பறவைக் காய்ச்சல்: மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 382 பறவைகள் இறப்பு

15th Jan 2021 08:30 PM

ADVERTISEMENT

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

கேரளாவைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் நேற்று (ஜன. 14) ஒரு நாளில் மட்டும் 382 பறவைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால் மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் இதுவரை 2,378 பறவைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Maharashtra
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT