இந்தியா

வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவினர் நுழைய தடை விதித்த ஹரியாணாவின் 60 கிராமங்கள்

13th Jan 2021 08:09 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜக மற்றும அதன் கூட்டணிக் கட்சியான ஜேஜேபி கட்சியினர் நுழைய 60 கிராம மக்கள் தடை விதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லியில் நடந்து வரும் போராட்டமானது 50 நாள்களை நெருங்கி உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேஜேபியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தங்களது கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து ஹரியாணாவைச் சேர்ந்த 60 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி 10 ஆம் தேதி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் பங்கேற்க இருந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

Tags : Haryana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT