இந்தியா

ஸ்ரீநகரில் குளிர்நிலை -7.8 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது

13th Jan 2021 12:40 PM

ADVERTISEMENT


ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஸ்ரீநகர் பகுதியில் - ஜம்மு - காஷ்மீரின் கோடைக்கால தலைநகர் - இன்று கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த குளிர்நிலை நிலவுகிறது. 

ஸ்ரீநகரில் இன்று குளிர்நிலை மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத குளிர்நிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே குளிர்நிலை கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் எல்லைப் பகுதியின் மற்றப் பகுதிகளிலும் கடுமையான குளிர்நிலையே நிலவுகிறது.

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் முகாமாக செயல்படும் பஹல்காம் சுற்றுலாத் தலம் பகுதியில் இன்று மைனஸ் 11.7 டிகிரி செல்சியஸ் குளிர்நிலை பதிவாகியுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : srinagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT