இந்தியா

கேரளத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறப்பு

13th Jan 2021 01:03 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை திரையரங்குகள் திறக்கப்பட்டன. 

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. பொது முடக்கத் தளர்வுகளில், திரைத்துறையினரின் தொடர் கோரிக்கைகளைத் தொடா்ந்து, 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்கம் திறப்பு எனப் படிப்படியான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கேரள மாநிலத்தில் கடந்த பத்து மாதங்களுக்குப் பிறகு கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

மேலும், மாநிலத்தில் உள்ள மொத்தம் 670 திரையரங்குகளில் 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டன. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜயின் திரைப்படமான மாஸ்டர் முதல் படமாக வெளியிடப்பட்டது. இருப்பினும் சில திரையரங்கங்களில், ப்ரொஜெக்டர் உபகரணங்கள் பழுது காரணமாகப் படம் நிறுத்தப்பட்டது. 

பாலக்காடு மாவட்டத்தில், விஜயின் ரசிகர்கள் பெரிய கட்அவுட்களுக்கு மலர்களால் அர்ச்சித்தும், பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : கேரளா திரையரங்குகள் Kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT