இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 23 பேர் கைது 

13th Jan 2021 11:50 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகரில் உள்ள கால் சென்டர்களில் சோதனை நடத்தப்பட்டதில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஐ.டி சட்டத்தின் 66, 66-பி மற்றும் 66-சி பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டதும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 419 மற்றும் 420 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சைபர் மோசடிகள் மற்றும் ஹேக்கிங் தொடர்பான அறிக்கைகள் குறித்த எஃப்.ஐ.ஆர் ஸ்ரீநகர், காஷ்மீர் மண்டல சைபர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பின்னர், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கால்சென்டர்களில் சோதனைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 23 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் காவல் சிறப்புப்படை அதிகாரி விஜய் குமார் கூறினார். 

Tags : Jammu and Kashmir cyber frauds hacking
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT