இந்தியா

‘இந்திய விஞ்ஞானிகளை நம்பாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’: பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

13th Jan 2021 04:19 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்திய விஞ்ஞானிகளை நம்பாத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என உத்தப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சிங் சோம் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அத்தடுப்பூசிகள் வரும் 16-ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களுக்குச் செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சர்தானா தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் “நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. பிரதமர் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு பாகிஸ்தான் மீது நம்பிக்கை உள்ளது. நாட்டின் விஞ்ஞானிகளை சந்தேகிக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லலாம்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இஸ்லாமியர்கள் குறித்த அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sangeet Som
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT