இந்தியா

பெங்களூரு: மெட்ரோ ரயில் சேவை தொலைவு அதிகரிப்பு

13th Jan 2021 03:44 PM

ADVERTISEMENT

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையின் எலச்சனஹள்ளி முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரையிலான தொலைவு கனகபுரா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை நாளை (ஜன. 14) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ரயில் சேவை விரிவாக்கம் பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்க மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடியூரப்பா நாளை தொடக்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீர் சிங் புரி காணொலி வாயிலாக கலந்துகொள்ளவுள்ளார்.

ADVERTISEMENT

விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ஆறு நிறுத்தங்களைக் கொண்டதாகவுள்ளது.

Tags : மெட்ரோ
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT