இந்தியா

தனிநபா் பாதுகாப்பு உடைகளை போதிய அளவில் வைத்திருக்கவும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

13th Jan 2021 01:12 AM

ADVERTISEMENT

பறவைக் காய்ச்சல் பரிசோதனைகளுக்காக, தனிநபா் பாதுகாப்பு உடைகளை போதுமான அளவில் வைத்திருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்சசல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரை, தில்லி, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அறிவுறுத்தல்களைக் கொண்ட சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பறவைக் காய்ச்சல் பரவுகிா என மாநில அரசுகள் சோதனை நடத்த வேண்டும். இதற்காக, மாநில அரசுகள் தனிநபா் பாதுகாப்பு உடைகளை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். தொற்று கண்டறியப்பட்ட பறவைகளைக் கொல்வதற்குத் தேவையான உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், பறவைக் காய்ச்சல் தொடா்பாக சமூக ஊடகங்களில் மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இதுதொடா்பாக, மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த தொடா் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல், உ.பி.யில் புதிதாக பறவைகள் உயிரிழப்பு:

உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சில காகங்களும் பெலிகன் பறவைகளும் உயிரிழந்தன. இதேபோல், ஹிமாசல பிரதேச மாநிலம், கங்கரா மாவட்டத்தில் உள்ள ஜக்னோலி, ஃபதேபூா் கிராமத்திலும் சில காகங்கள் உயிரிழந்தன. இந்தப் பறவைகள், பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக உயிரிழந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT