இந்தியா

‘மாலையில் சென்றதால் பாலியல் வன்கொடுமை’: மகளிர் ஆணையத் தலைவர் சர்ச்சைப் பேச்சு

8th Jan 2021 03:26 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்குச் சென்ற மகளிர் ஆணையத் தலைவர் தெரிவித்த கருத்து சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் படான் நகரில் 50 வயதான பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

இந்த வழக்கில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரான சந்திரமுகி தேவி விசாரணைக்காக வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு சென்றார். விசாரணையின் முடிவில் வழக்கு விசாரணையில் காவல்துறை மீது அதிருப்தி தெரிவித்த சந்திரமுகி கொலை செய்யப்பட்ட பெண் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியது.

“கொலை செய்யப்பட்ட பெண் மாலை நேரத்தில் வெளியில் செல்லாமல் இருந்திருந்தாலோ அல்லது உடன் குடும்ப உறுப்பினர்கள் யாராவது சென்றிருந்தாலோ இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்” என சந்திரமுகி தேவி தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும் அந்தப் பெண் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றிருந்தால், உயிர் பிழைத்திருக்கலாம் என்று  தெரிவித்த சந்திரமுகி தேவி ஆனால் அவருக்கு அத்தகைய வசதி கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Tags : chandramukhi devi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT