கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கும் என மாநில சட்டப்பேரவை சபைத்தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் அமர்வில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது. கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.