மாரடைப்பு காரணமாக கேரளத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் கேகே ராமச்சந்திரன் இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் கேகே ராமசந்திரன்(84). இவர் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.
மறைந்த ராமசந்திரன் 6 முறை வயநாடு சட்டப்பேரைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
மேலும் ஏகே அந்தோணி அமைச்சரவையில் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சராகவும், உம்மன்சாண்டி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இவர் பதவிவகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கேகே ராமசந்திரனின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.