இந்தியா

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக தேசியத் தலைமை முடிவு செய்யும்: எடியூரப்பா

7th Jan 2021 04:15 AM

ADVERTISEMENT


பெங்களூரு,: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜகவின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக தேசியத் தலைமை தான் முடிவுசெய்யும். அமைச்சராகும் ஆசையில் உள்ள சிலர் அமைச்சரவை விரிவாக்கம் 2-3 நாள்களில் நடக்கும் என்று கூறியிருக்கலாம். அதுகுறித்து நான் எதற்காக வாக்குறுதி அளிக்க வேண்டும்? யார் அமைச்சராக வேண்டுமோ, அவர்கள் கண்டிப்பாக அமைச்சராவார்கள் என்றார்.
முதல்வர் எடியூரப்பாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த பாஜக எம்.எல்.சி. ஆர்.சங்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடுத்த 2-3 நாள்களில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அப்போது நான் அமைச்சராக்கப்படுவேன்' என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வரின் அரசியல் செயலாளரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான எம்.பி. ரேணுகாச்சார்யா, "கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சரியான நேரத்துக்காக காத்திருக்கும்படி, அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருப்போருக்கு கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார்' என்று விளக்கம் 
அளித்தார்.
இதனிடையே, அண்மையில் சிவமொக்காவில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சிவமொக்கா வந்திருந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், "கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் வெகுவிரைவில் நடைபெறும். அதை முதல்வர் எடியூரப்பா முடிவு செய்வார்' என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT