இந்தியா

பிரிட்டன் விமானங்களுக்கு ஜன. 31 வரை தடை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

7th Jan 2021 03:22 PM

ADVERTISEMENT


பிரிட்டன் விமானங்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை தடை விதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா படிப்படியாக பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பிரிட்டன் உடனான விமான போக்குவரத்திற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.

தென்கொரியாவில் மேலும் 2 வாரங்களுக்கு பிரிட்டன் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் பிரிட்டன் உடனான விமான சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வகை கரோனா கண்டறியப்பட்டு வருகிறது. இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT

நாட்டில் புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT