இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: 4 நாள்களுக்குப் பிறகு விமான சேவை தொடங்கியது

7th Jan 2021 04:32 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் நான்கு நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த நான்கு நாள்களாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையிலும், மொகல் சாலையிலும் பனி மூடியதால் காஷ்மீா் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

கடந்த திங்கள் கிழமை (ஜன. 4) முதல் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது,.

ADVERTISEMENT

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட விமான ஓடுதளம் வரை அனைத்துப் பகுதிகளும் பனியால் மூடப்பட்டிருந்தது. 

விமான ஓடுதளத்தில் படர்ந்திருந்த பனியை அகற்றும் பணியாலும், மோசமான வானிலையாலும் கடந்த நான்கு நாள்களுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று விமான ஓடுதளம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று (ஜன. 7) முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

Tags : jammu-kashmir
ADVERTISEMENT
ADVERTISEMENT