மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று (ஜன. 7) ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதில் நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை வழங்குவதில் உள்ள சாவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாளை (ஜன. 8) நாடு முழுவதும் மீண்டும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகம் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ADVERTISEMENT
இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.