இந்தியா

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவு

7th Jan 2021 06:32 PM

ADVERTISEMENT

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை ரிக்டர் அளவில் 4.4 அலகுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வியாழக்கிழமை மாலை 6:57 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு தென்கிழக்கே 2 கி.மீ. பகுதியிலும் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் நடுக்கம் ஏற்பட்டது.

கடந்த மூன்று வாரங்களில் அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட 3ஆவது நிலநடுக்கம் இதுவாகும். நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதம் மற்றும் உயிர்சேதம் ஆகியவை ஏற்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT