ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயிரியல் பூங்காவில் பறவைகளை ஆய்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள மந்தா மான்கள் பூங்காவில் உள்ள பறவைகளை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய கால்நடை மருத்துவ ஊழியர், ''பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.
கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் முறையாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வெறும் கைகளால் கோழிகளைத் தொட வேண்டாம்'' என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனைக் கண்காணிக்கும், வகையில் தில்லியில் மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.