இந்தியா

ஆந்திரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

7th Jan 2021 02:46 PM

ADVERTISEMENT


பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்த்துர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரில் இருந்த நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. காரில் வந்தவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஐந்து பேரும் திருமலை திருப்பதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 - 3  மணிக்கு கார் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. நிகழ்விடத்திலேயே நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT