இந்தியா

திரையரங்குகளில் 100% அனுமதி வாபஸ் ஆகுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்

6th Jan 2021 06:15 PM

ADVERTISEMENT

புது தில்லி: திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விதிமீறல் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா,  தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி  மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையைப் பின்பற்றி நடக்க வேண்டும். 

ADVERTISEMENT

உள்துறை அமைச்சகத்தின் கரோனா தடுப்பு விதிகள் நீர்த்துப் போகக்கூடிய நடவடிக்கைளை எடுக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்குகளில் 50 சதவீத  பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று கூறப்படுகிறது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT