இந்தியா

பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 13 பேருக்கு அதிதீவிர கரோனா

6th Jan 2021 03:23 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் 71 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 13 பேருக்கு அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதையடுத்து இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் நாட்டில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 12 நாள்களாக, உயிரிழப்போர் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே உள்ளது.

ADVERTISEMENT

கடந்த 7 நாள்களாக, 10 லட்சம் பேருக்கு ஒருவர் என்ற அளவிலேயே இந்தியாவில் கோவிட் இறப்பு எண்ணிக்கை உள்ளது.

மற்றொரு சாதனையாக, கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து தற்போது 2,27,546 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.2 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 21,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 3,490 பேர் குறைந்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக தினசரி பாதிப்பு 20,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 18,088 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை (99,97,272) நெருங்குகிறது. குணமடைந்தோர் வீதம் 96.36 சதவீதத்தை நெருங்குகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 4,922 பேருக்கும், மகாராஷ்டிராவில் 2,828 பேருக்கும், சட்டீஸ்கரில் 1,651 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT