இந்தியா

புதிதாக 21 விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் முடிவு

6th Jan 2021 11:43 AM

ADVERTISEMENT

அடுத்த வாரம் முதல் புதிதாக 21 உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மும்பையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா பகுதிக்கு வாரம் இரண்டு விமானங்களும், தில்லியிலிருந்து ராஸ் அல்-கைமா பகுதிக்கு வாரம் நான்கு விமானங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து ஒடிசாவின் ஜார்சுகுடா பகுதிக்கு கூடுதல் இருக்கைகளுடன் கூடிய B737 ரக விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஹைதராபாத் முதல் விசாகப்பட்டிணம் வரையிலும், திருப்பதி முதல் விஜயவாடா வரையிலும் நாள்தோறும் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : SpiceJet
ADVERTISEMENT
ADVERTISEMENT