இந்தியா

பஞ்சாப்: 5 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு

6th Jan 2021 03:53 PM

ADVERTISEMENT

சண்டிகர்: பஞ்சாபில் 5 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தேர் சிங்காலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்,  5 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வகுப்புகள் நடைபெறும். 

அனைத்து பள்ளிகளிலும் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கப்பட்டதாகக் கூறினார்.

ADVERTISEMENT

Tags : punjab
ADVERTISEMENT
ADVERTISEMENT