இந்தியா

கரோனா: கேரளம் விரையும் மத்திய அரசின் உயர்நிலைக் குழு

6th Jan 2021 09:32 PM

ADVERTISEMENT


கேரளத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் தலைமையிலான மத்திய அரசின் உயர்நிலைக் குழு கேரளம் விரைகிறது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி அந்தக் குழு வெள்ளிக்கிழமை கேரளம் சென்றடைகிறது. 

கரோனாவை எதிர்கொள்வதில் மாநில பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து, அதுசார்ந்த நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு இந்தக் குழு உதவவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 7 நாள்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT