இந்தியா

பறவைக் காய்ச்சல்: கண்காணிப்பு மையம் அமைத்தது மத்திய அரசு

6th Jan 2021 10:56 AM

ADVERTISEMENT

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில் தில்லியில் மத்திய அரசு கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. 

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கேரளத்தில் கோட்டயத்தில் ஒரே இடத்தில் இருந்த 1,600 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இது நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவுவதை கண்காணிப்பதையோடு, தடுக்கும் வழிமுறைகளை வழங்கும். 

பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் வாரத்திற்கு ஒருமுறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : bird flu
ADVERTISEMENT
ADVERTISEMENT