இந்தியா

விவசாயிகள் பிடிவாதமாக இருந்ததால் தீர்வு காண முடியவில்லை: தோமர்

4th Jan 2021 07:08 PM

ADVERTISEMENT


புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருந்ததால் தீர்வு காண முடியவில்லை என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே 7-ம் கட்ட பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படாததால் 8-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் தோமர் தெரிவித்தது:

"3 சட்டங்கள் குறித்தும் ஒவ்வொரு அம்சமாக ஆலோசனை நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருந்ததால் எங்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இன்றைய பேச்சுவார்த்தையைப் பார்க்கும்போது, அடுத்த கூட்டத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்று ஒரு முடிவுக்கு வருவோம் என நம்புகிறோம்."

ADVERTISEMENT

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : farm laws
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT