இந்தியா

உ.பி.யில் தலைமை மருத்துவ அதிகாரி கரோனாவுக்கு பலி

4th Jan 2021 12:35 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) கரோனா தொற்றுக்கு திங்கள்கிழமை உயிரிழந்துள்ளார். 

லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சி.எம்.ஓ ஜிதேந்திர பால் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாகக் கூடுதல் சி.எம்.ஓ ஹரிநந்தன் தெரிவித்தார்.

கடந்த டிச.29-ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

ADVERTISEMENT

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 8,403 கரோனா இறப்புகளும் 5,88,171 கரோனா பாதிப்புகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : கரோனா coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT