காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதையில் உள்ள பனிப்பொழிவு தற்போது அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு சீரடைந்த பின்பு விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.
ADVERTISEMENT
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பனிப்பொழிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மேலும், இன்று முதல் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.