இந்தியா

தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: சத்ய பிரதா சாஹு

4th Jan 2021 01:07 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வாய்ப்பில்லை என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹு, தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை திட்டவட்டமாக அவர் மறுத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்தப் பரிந்துரையும் தேர்தல் ஆணையத்துக்கு செய்யப்படவில்லை எனவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவே நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : election TN Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT