இந்தியா

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை: 8-ம் தேதி மீண்டும் பேச்சு

4th Jan 2021 06:31 PM

ADVERTISEMENT


மத்திய அரசு, விவசாயிகளுக்கிடையிலான 7-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படாததால் ஜனவரி 8-ம் தேதி 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

புதிதாக இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இதுதவிர குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும் முடிவு எட்டப்படவில்லை. இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே திங்கள்கிழமை 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, வரும் 8-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைத்திந்திய விவசாயிகள் சபை பொதுச்செயலாளர் ஹன்னன் மோல்லா தெரிவித்தது:

ADVERTISEMENT

"அரசு கடுமையான அழுத்தத்தில் உள்ளது. 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்று நாங்கள் அனைவரும் தெரிவித்தோம். அது தவிர்த்து வேறு எந்த விஷயம் குறித்தும் ஆலோசனை நடத்த நாங்கள் விரும்பவில்லை. சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்."

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : farm laws
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT