இந்தியா

10 மாதங்களில் மும்பையில் இன்றே கரோனா பலி குறைவு

4th Jan 2021 11:39 AM

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மும்பையில் கரோனா பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. 

மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மும்பையில் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே கரோனா பாதிப்பு மற்றும் பலி அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாத்தோப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. 

தொடர்ந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவே மிகவும் குறைவு என்று மும்பை நகர ஆணையர் ஐ.எஸ்.சாஹல் தெரிவித்துள்ளார்.  

மகாராஷ்டிரா அரசு மற்றும் பிரிஹான் மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) கடின உழைப்புக்கு பலன் கிடைத்து வருகிறது என்றும் மக்களின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமல்ல என்றும் அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT

மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி மும்பையில் கரோனா இறப்பு எண்ணிக்கை 11,135யை எட்டியுள்ளது. புதிதாக 581 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,95,241 ஆக அதிகரித்துள்ளது. 

மும்பை டிவிஷனில் ஒரேநாளில் 1,148 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது, ஏழு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT