இந்தியா

ஹிமாசலில் நிலச்சரிவு: நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பு 

4th Jan 2021 10:57 AM

ADVERTISEMENT

 

ஹிமாலப் பிரதேசம், கின்னூர் மாவட்டத்தில் நகோ அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். 

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் நூற்றுக்கணக்காக மக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பனிப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள காசா துணைப்பிரிவின் சாலை இணைப்பு மற்றும் கின்னூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கின்னூர்-காசா சாலையில் ஏற்பட்ட கற்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

நிலச்சரிவு காரணமாக சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

Tags : Landslide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT