இந்தியா

நாட்டில் புதிதாக 16,504 பேருக்கு கரோனா; 214 பேர் பலி

4th Jan 2021 11:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,504 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 214 பேர் பலியாகியுள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,03,40,469 ஆக உள்ளது. இவர்களில் 99.46 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 96.19 சதவீதமாக உள்ளது.  கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,49,649 ஆக உள்ளது. இது 1.45 சதவீதமாகும்.

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14வது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2,43,953 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது மொத்த பாதிப்பில் 2.36 சதவீதமாகும்.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT