இந்தியா

கேரளத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறப்பு

4th Jan 2021 12:42 PM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கத்தினால் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டன. 

கரோனா நோய்ப் பரவலால் கடந்த 2019 மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. 

கேரளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக இளங்கலையில் இறுதியாண்டு மாணவர்ககளுக்கும், முதுகலை மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்கியுள்ளன. 

பொறியியல் கல்லூரி மாணவர்களில் 3, 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்குகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு 5 மணி நேரம் நடத்தவும் கல்லூரி நிறுவனங்களில் முறையாக கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT