இந்தியா

நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை ஆன்லைனில் நடத்தலாமா? தேசிய தேர்வு முகமை கடிதம்

4th Jan 2021 12:58 PM

ADVERTISEMENT


புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தலாமா? என்று கேட்டு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அச்சகத்துக்கு தேசிய தேர்வு முகமை எழுதியிருக்கும் கடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை, ஆன்லைன் மூலம் நடத்தலாமா? எனக் கேட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை

மேலும், நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரே ஒரு முறை நடத்தப்பட்டால் அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தலாமா? என்றும், வழக்கமான முறையில் நீட் தேர்வு நடத்துவது சற்று சிரமம் என்பதால் ஆன்லைனில் நடத்தலாமா என்றும் தேசிய தேர்வு முகமை கேள்வி எழுப்பியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : NEET medical
ADVERTISEMENT
ADVERTISEMENT