பிரிட்டனிலிருந்து திரும்பிய 8 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். புணே, தாணே மற்றும் மிரா பயந்தரிலிருந்து தலா ஒருவர்.
இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் தோப் தெரிவித்தார்.