இந்தியா

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!

4th Jan 2021 01:09 PM

ADVERTISEMENT

தில்லி போராட்டத்தில் விவசாயிகளின் உயிரிழப்பு 60 ஆக அதிகரித்துள்ளது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின்  போராட்டம் 40 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.  தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

சனிக்கிழமை இரவு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தும் தில்லி எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

ADVERTISEMENT

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று 7 ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் போராட்டத்தில் விவசாயிகளின் இறப்பும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாகவும் தற்போது வரை போராட்டத்தில் கலந்துகொண்ட 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும்  பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் உயிரிழப்புக்கு பதில் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

வெகுண்டெழுந்த விவசாயிகளின் பெரும் போராட்டம்

Tags : delhi
ADVERTISEMENT
ADVERTISEMENT