இந்தியா

கரோனா தடுப்பூசி: தில்லியில் 9 லட்சம் பேருக்கு முன்னுரிமை

3rd Jan 2021 03:04 PM

ADVERTISEMENT


தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் கரோனா தடுப்பு மருந்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தில்லியில் 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தில்லியில் 3 லட்சம் மருத்துவ ஊழியர்கள், 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதற்கட்டமாக அவர்களுக்கு அளித்த பிறகு, தில்லியில் மற்றவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று கூறினார்.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT