இந்தியா

மத்திய அமைச்சர் சதானந்த கௌடா மருத்துவமனையில் அனுமதி

3rd Jan 2021 10:07 PM

ADVERTISEMENT

உடல் நலக்குறைவால் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா சிவமொக்காவில் இன்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து அவர் பெங்களூருக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் மதிய உணவிற்காக அவரது காரை சித்ரதுா்கா எனும் பகுதியில் நிறுத்தினார். 
அப்போது காரில் இருந்து இறங்கியபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பசவேஸ்வரா உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ரத்தத்தில் சா்க்கரையின் அளவு குறைந்ததால் அவா் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் சதானந்த கௌடா இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : Sadananda Gowda
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT